திருச்சியில் மயங்கி விழுந்து 4 பேர் பலி.....

By senthilvel – January 15, 2022

658

Share E-Tamil News



திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை குடியிருப்பு அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர் அவரை பரிசோதனை செய்து விட்டு இறந்து விட்டதாக கூறினார். இதுதொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் இவரது மனைவி கஸ்தூரி ( 63).  வீட்டில் இருந்த அவர் மயக்கமாக உள்ளது என்று கூறி  உள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர்கள் கஸ்தூரி இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிந்தாமணி புதூர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (32).  இவர் வீட்டில் மயக்கம் வந்து வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமேற்பட்டது.  இதையடுத்து அவரை  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (30).  இவர் சம்பவத்தன்று திருச்சியில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். பிறகு மத்திய பேருந்து நிலைய பகுதியில் நண்பருடன் மது குடித்து உள்ளார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies