திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் செயின் பறிப்பு.....

By senthilvel – January 15, 2022

270

Share E-Tamil Newsதிருச்சி ஆர்எம்எஸ் காலனி அசோக் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி விஜயா(59). இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தொியாத மர்ம நபர், விஜயா கழுத்தில் இருந்த எட்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies