கரூரில் தடையை மீறி சேவல் சண்டை..... விரட்டி பிடித்த போலீசார்..... 10 வாகனங்கள் பறிமுதல்

By senthilvel – January 15, 2022

160

Share E-Tamil Newsஜனவரி 25ஆம் தேதி வரை எந்தவிதமான சேவல் சண்டைகள் நடத்தக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோன் அமைந்துள்ளது. அதில் காலியான இடத்தில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு

தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் தலைதெறிக்க ஓடினர். இதில் பாலாஜி என்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அங்கு நின்று கொண்டிருந்த, 10 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். பந்தயத்திற்கு பயன்படுத்திய

மூன்று சேவல்களை போலீசார் கைப்பற்றினர். ஒரு சேவல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டையில், சம்பவ இடம் முழுவதும் ரத்தக்காடாக காட்சி அளித்த நிலையில் கத்தி பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், விஷம் தடவப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.