ஈரோடு: யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி.....

By senthilvel – January 15, 2022

86

Share E-Tamil Newsஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியை சேர்ந்தவர் மசனையன் (60). விவசாயியான இவர் தனது விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். காட்டுவிலங்குகள் நாசம் செய்யாமல் இருப்பதற்காக, அவர் தனது பயிருக்கு காவலாக இருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று விளைநிலத்திற்குள் நுழைய முற்பட்டு உள்ளது. அதனை விரட்டுவதற்கு எந்தனித்த போது, யானை தாக்கியதாக கூறப்படுகிறது. யானை தாக்கியதில் மசனையன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனத்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies