திருச்சி சூரியூர் ஜல்லிகட்டில் காளை முட்டியதில் ஒருவர் பலி......

By senthilvel – January 15, 2022

608

Share E-Tamil Newsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில்  400 காளைகள், 300 வீரர்கள் களம் காணும் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. இன்றைய சூரியூர் ஜல்லிகட்டு நிகழ்ச்சியினை youtube வாயிலாக  உங்கள் etamilnews.com -ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. காணத்தவறாதீர்கள்

திருச்சி திருவெறும்பூர் பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு காளைகள் வரிசை எண் படி கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இதில் 112 டோக்கன் எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்(29) என்பவர் தொழுவத்தில் அவிழ்த்து விடுவதற்காக அழை்த்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் காளை மீனாட்சி சுந்தரத்தை முட்டி உள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மீனாட்சி சுந்தரம் உயிரிழந்தார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies