திருவண்ணாமலையில் கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை......

By senthilvel – January 14, 2022

92

Share E-Tamil News



திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்......... திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜனவரி 17 காலை 04.14 மணி முதல் ஜனவரி 18 அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்   பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தொிவித்துள்ளார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies