அவனியாபுரம்.... சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு

By senthilvel – January 14, 2022

356

Share E-Tamil Newsமதுரை அவுனியாபுரம் ஜல்லிகட்டு முடிவடைந்தது. இதில் 624 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  சிறந்த காளையாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாடு பிடி வீரர்களில் 24 காளைகளை பிடித்து அவனியாபுரம் கார்த்திக் முதலிடம் பிடித்தார். வலையங்குளம் முருகன் 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.  பரத்குமார் 12 காளைகளை பிடித்து 3ம் இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கார் பரிசளிக்கப்பட்டது. பரிசு மற்றும் கோப்பைகளை மதுரை மாவட்ட கலெக்டர் வழங்கினார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies