சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்....

By senthilvel – January 14, 2022

88

Share E-Tamil Newsசபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு முக்கிய பூஜைகளில் ஒன்றான மகரசங்கராந்தி இன்று  நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆபரண பெட்டிகள் இன்று மாலை சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொள்வர்.பின் நடை அடைத்து அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். அதன் பின்னர் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் காட்சி தரும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சிதரும். மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.