நடிகை லட்சுமி ராய்க்கு கோல்டன் விசா...

By senthil – January 13, 2022

110

Share E-Tamil Newsஐக்கிய அமீரகம் தற்போது இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகின்றனர். இந்த கோல்டன் விசா அந்த நாட்டின் குடியுரிமை போன்றது. 10 வருடத்திற்கு கோல்டன் விசா பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பத்து வருட காலத்தில் அவர்கள் ஐக்கிய அமீரகத்தில் வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

laxmi rai

மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான்,மம்முட்,டி மோகன்லால், ஆஷாசரத் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் கோல்டன் விசா பெற்றார். தற்போது நடிகை லட்சுமி ராய்க்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளனர். இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அவர் "ஐக்கிய அமீரகம் எப்போதும் எனக்கு வீடு போன்றது. கோல்டன் விசா வழங்கி என்னை கவுரப்படுத்திய ஐக்கிய அமீரக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies