சாய்னா மீது விமர்சனம் ... நடிகர் சித்தார்த் மீது போலீசார் விசாரணை....

By senthil – January 12, 2022

172

Share E-Tamil Newsகடந்த ஜனவரி 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டில்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டிவிட்டரில்.... "எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் டிவிட்டரை டேக் செய்த நடிகர் சித்தார்த் ஆபாச வார்த்தைகள் கலந்து கருத்து பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் டிவிட்டர் பதிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சாய்னாவிடம் நடிகர் சித்தார்த்து மன்னிப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக போலீசாருக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies