சித்தப்பாவால் சிதைக்கப்பட்ட சிறுமி.. கொலை மிரட்டலால் மனநிலம் பாதிக்கப்பட்ட கொடுமை...

By senthil – January 12, 2022

204

Share E-Tamil Newsசென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர்  சரோசா (வயது39)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது மகளுடன் கடந்த 9ம் தேதி வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், புரசைவாக்கத்தில் சொந்த வீட்டின் கீழ் தளத்தில் கணவர் மற்றும் 16 வயது மகளுடன் வசித்து வருகிறேன். மகள் தற்போது அயனாவரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு வீட்டின் மொட்டை மாடியில் விளையாட சென்ற போது வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் எனது கணவரின் சகோதரன் நாராயணன் (59), மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மகள் எங்களிடம் சொல்லாமல் தனது மனதிலேயே வைத்துக்கொண்டு இருந்ததால் அவளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டது.  நாங்கள் அவரை கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.அப்போது மருத்துவர்களிடம் எனது மகள் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். அதனால் தான் சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். எனவே, எனது கணவரின் சகோதரனான ஆட்டோ டிரைவர் நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆட்டோ டிரைவர் நாராயணனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தனது சகோதரன் மகள் என்றும் பாராமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த விஷயத்தை கூறினால் தந்தையை கொன்று விடுவதாக நாராயணன் மிரட்டியதால் சிறுமி விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அதைதொடர்ந்து ஆட்டோ டிரைவர் நாராயணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies