குறுவைக்கு தேவையான நீர் கிடைக்கும்.. அமைச்சர் நேரு நம்பிக்கை...

By செந்தில்வேல் – May 27, 2022

664

Share E-Tamil Newsஇன்று மாலை கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு நிருபர்களிடம் கூறியதாவது... -கல்லணையின் கீழ் பகுதியில் 3.38 லட்சம் ஏக்கரிலும், மேட்டூரில் கீழ் 5.21 ஏக்கர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 924 ஏரிகள் நிரப்பப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 400 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. கடைமடைக்கு காவிரியில் தண்ணீர் சென்ற பிறகு, 36 ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்படும். சம்பிரதாயமாக கல்லணை கால்வாயில் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய், வடவாறு ஆறுகளில், கட்டுமானப் பணிகள் பத்து நாள்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் முழுமையாக திறக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை குறையாத என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பிரச்சனை இருக்காது. கடந்த காலங்களில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கப்பட்டதால் வீணாக கடலில் கலந்தது. தண்ணீரை கொண்டு படிப்படியாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் நேரு கூறினார்..