டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது..

By செந்தில்வேல் – May 27, 2022

654

Share E-Tamil Newsமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் 118 அடி தண்ணீர் நிரம்பியதை அடுத்து. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட சாகுபடிக்காக சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக மேட்டூர் அணை ஜூன் 12 க்கு முன்பாக மே மாதம் 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது எடுத்து டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இணை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி கே என் நேரு ஆகியோர் திறந்து வைத்தனர். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரியில் 500 கனஅடி வெண்ணாற்றில் 500 கனஅடி கல்லணை கால்வாயில் 100 கனஅடி கொள்ளிடத்தில் 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் பெண்ணாறு காவிரி உள்ளிட்ட ஆறுகளில் பாலம் கட்டும் பணி மற்றும் புனரமைக்கும் பணி தடுப்பணையை கற்கும் பணக நடைபெற்று வருவதால் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது. பணிகள் விரைந்து முடிந்த பிறகு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.