ரஜினி படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்...

By senthil – January 11, 2022

166

Share E-Tamil Newsதிரைப்படத் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஜெமினி கணேசன் நடித்த ‘பேரப்பிள்ளை’ படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் எம்.முத்துராமன். அதனைத்தொடர்ந்து,  ’உங்க வீட்டுப் பிள்ளை’, ‘ராஜ மரியாதை’, ‘எடுப்பார் கைப்பிள்ளை’, ‘மூடு மந்திரம்’ ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டப் படங்களைத் தயாரித்துள்ளார். இதில், ‘ராஜமரியாதை’ படத்தில் சிவாஜியும் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவர் தயாரித்த ‘நலந்தானா’ என்ற படத்தில்தான் நடிகர் பிரபு முதன்முறையாக நாயகனாக அறிமுகமானார். அதேபோல், இவரின் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படம் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 83 வயதாகும் எம்.முத்துராமன் உடல்நலக்குறைவால் இன்று  உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies