மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி வரலாற்று சாதனை...

By senthil – January 11, 2022

378

Share E-Tamil Newsஅமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற மாற்று இருதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்துவதற்கு தகுதியற்ற நிலையில்  காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.

கடந்த புத்தாண்டையொட்டி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பன்றியின் இதயத்தை பொருத்த அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயத்தை பொருத்தி உள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டேவிட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பன்றியின் உறுப்புகளை மனித உடல் ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies