3-வது டெஸ்ட்டில் களமிறங்குவேன் .... விராட் கோலி..

By senthil – January 10, 2022

108

Share E-Tamil Newsஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை கேப்டவுன் நகரில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என சமநிலையை எட்டியுள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசினார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. கடந்த போட்டியில் அவர் போதிய உடற்தகுதியுடன் இல்லாத காரணத்தால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  “நான் முழு உடற்தகுதியுடன் உள்ளேன். வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் நாளைய போட்டியில் அணியில் இடம் பெறமாட்டார். அவர் போதிய உடற்தகுதியுடன் இல்லை. அதனால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நாம் எல்லோரும் அவரவர் கெரியர்களில் தவறு செய்திருப்போம். அதை ஏற்றுக் கொள்வது நமக்கு பெரிதும் உதவும்” என பண்ட் குறித்தும் கோலி பேசியுள்ளார்.  அதே போல யார் மீதும் நாம் மாற்றத்தை திணிக்க முடியாது என சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே குறித்து பேசி உள்ளார் கோலி. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies