வேளாண் பெண் அதிகாரியின் மார்பிங் படத்தை வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

By செந்தில்வேல் – January 10, 2022

484

Share E-Tamil Newsபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (19).இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறையில் பணியாற்றி வரும் ஒரு இளம் பெண் அதிகாரியின் இ-மெயில் முகவரியை 'ஹேக்' செய்து, அதனுள் இருந்த அவரது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார்.  மேலும் அந்த புகைப்படங்களை 'மார்பிங்' செய்தும், அதனை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவதாகவும், பரப்பாமல் இருப்பதற்கு ரூ.50 ஆயிரம் தரும்படி கூறி மிரட்டியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண் அதிகாரி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவரது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மனோஜ்குமார் பரப்பியுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் அதிகாரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மனோஜ்குமாரை கைது செய்தனர். ஆன்லைன் கேம் விளையாட்டிற்கு அடிமையான அவர், பணத் தேவைக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு பணம் பறிக்க முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies