திருச்சி சிட்டியில் வழிபறியில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது......

By senthilvel – May 14, 2022

534

Share E-Tamil Newsதிருச்சி தென்னூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் காதர்ஷெரீப். இவருடைய மனைவி ஹமீம் (45). இவர் தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பெண்கள், 5 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த ஹண்ட் பேக்கை ஹமீமிடம் இருந்து பறித்தனர். இது குறித்து ஹமீம் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து 3 பெண்களையும் பிடித்து போலீஸ் நிலையம்அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி (36), பார்வதி (52), லாவண்யா (55) என்பது தெரியவந்தது. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பெண்களையும் கைது செய்தனர். இவர்கள் மீது அருப்புக்கோட்டை, பண்ருட்டி, சேலம் டவுன் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.