By senthilvel – May 14, 2022
Share E-Tamil News
திருச்சி தா.பேட்டை சின்னசேலம்பட்டியை சேர்ந்த சுந்தரம்-சந்திரா ஆகியோரின் மகள் சங்கீதா(17). இவர் தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சங்கீதா காதலித்தவரோ, அண்ணன் உறவுமுறை கொண்டவர். இதனால் அவரின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் மனவிரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட சங்கீதா, கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் எந்த வித பலனும் இல்லை. இந்நிலையில் சின்னசேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இளம்பெண் பிணம் ஒன்று மிதப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றினர். அதன் பின்னர் அது சங்கீதாவின் பிணம் என்பது தொிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக பிணத்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து, காதல் தோல்வியால் தற்கொலையா? அல்லது தனியாக இருந்த சங்கீதாவை யாரேனும் கொலை செய்து கிணற்றி வீசி உள்ளனரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.