By senthilvel – May 14, 2022
Share E-Tamil News
திருச்சி சாலை ரோடு லெட்சுமி ஜூவல்லரி எதிரே கும்பகோணம் அய்யங்கார் காபி கடை உள்ளது. இந்த காபி கடையில் இன்று மாலை ஏராளமானவர்கள் காபி குடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கடைக்குள் இருந்து பெரும் தீப்பிழம்பு கிளம்பி உள்ளது. இதனால் கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வௌியேறி உள்ளனர். மேலும் காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் டம்ளர்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். தீயான மொத்த கடையிலும் பரவி கொளுந்து
விட்டு எரிந்துள்ளது. இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயிணை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கடைக்குள் இருந்த 3 எரிவாயு சிலிண்டர்கள் மீது ஈர சாக்கு போட்டு தீயணைப்பு வீரர்களால் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு நடக்க விருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.