திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ப்ளஸ் 2 மாணவர் பலி.....

By senthilvel – May 14, 2022

538

Share E-Tamil Newsதிருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன்(18). 12ம் வகுப்பு படிக்கும் இவர் இன்று தனது நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் தரவில்லை. இதன் காரணமாக திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுதர்சனை கொள்ளிடம் ஆற்று நீரில் தேடினர்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பின்னர் சுதர்சனனின் சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லுார் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.