By senthilvel – May 14, 2022
Share E-Tamil News
திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை, டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப்படுவதாக நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்நிலையில், திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பல பாஜகவினர் மீது திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.