எரிஞ்ச ஓட்டல ஆட்டய போட்ட திருச்சி அதிகாரி..... - சுப்புனி கடைல பேச்சு

By senthilvel – May 14, 2022

546

Share E-Tamil Newsதேன் எடுக்கிறவன் ஒருத்தன் புறங்கைய நக்குறவன்  ஒருத்தன்னு திருச்சியில ஒரு முக்கியமான ஆபீஸ்ல புலம்பல் சத்தம் கேக்குதுபா... என்று சொல்லி கொண்டே சந்துகடை காஜா பாய், காபி கடை பெஞ்சில் வந்து உக்காந்தார். ஏற்கனவே அந்த இடத்தில உக்காந்து இருந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும்,  பொன்மலை சகாயமும் சுவாரசியமாக...... யப்பா  சுப்புனி,  பாய்க்கு ஒரு காப்பி போடு, நல்ல சேதியோடு வந்து இருக்காப்ல போல என்று கூறியபடி, காஜாவின்  முகத்தை பார்த்தனர். அவர்கள் ஆர்வத்தை புரிந்து கொண்ட காஜா,  அது ஒண்ணும் இல்லப்பா..... திருச்சி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல்ல ரெண்டு நாளைக்கு முன்னாடி பத்திக்கிச்சி தெரியுமில்ல. அத அணைக்க  திருச்சி மய்யப் பகுதியிலிருந்து வீரர்களும், ஸ்ரீரங்கம் வீரர்களும், 5 வண்டியில நாலஞ்சு மணி நேரமாகப் போராடி கண்ட்ரோல் பண்ணி இருக்காங்க. முன்னாள் கவர்ச்சி நடிகை பெயர் கொண்ட திருச்சி  அதிகாரி பேறுகால விடுப்பு போயிருக்குறதுனால, கரூர் அதிகாரி இப்போ பொறுப்பதிகாரியாக இருக்குறாரு,  கன்னியாகுமரியில் உள்ள பாறை பேர் கொண்ட அந்த அதிகாரி, அணச்சு முடிச்ச பிறகு  ஸ்பாட்டுக்கு வந்து ஒரு செல்பி எடுத்து, அத உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ....... தான் முன்னின்று அணச்சதா ஜம்பம் அடிச்சுருக்குறாரு. அதோடு மட்டுமில்லாமல் அடுத்த நாளே அந்த  ஓட்டலுக்கு போய்...... என்ஓசி கொடுக்குறதுக்கு ஒரு அமெளண்ட், ரொம்ப கஷ்டப்பட்டு அணச்சோம்.....அதனால வீரர்களுக்கு ஒரு அமெளண்ட்  என்று பேரம் பேசி பெத்த அமௌண்டை ஆட்டையை போட்டு,  மொத்தமா பாக்கெட்டில் போட்டுட்டு போயிட்டாராம். அரசு அதிகாரிங்க ஆட்டையை போடுவது என்னமோ வழக்கம்தான், ஆனால் ஆட்டைய போட்ட அமௌண்ட்ல கொஞ்சமாவது உசிர கொடுத்து உழைச்ச வீரர்களுக்கு பிரிச்சு  கொடுத்திருக்கலாம் இல்ல. இப்படியா மொத்தமா சுருட்டுவது  என்று காதில் புகை வரும் அளவிற்கு  வீரர்கள் கடும் கோவத்தில் இருக்காங்களாம்.... என்று காஜா ஒரே மூச்சில் சொல்லி முடிக்க...... அப்போ நெருப்பு அணைக்கிற ஆபீஸ்ல ஒரே புகைச்சல்லுண்ணு சொல்லு என்று சகாயம் சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது.