By செந்தில்வேல் – May 14, 2022
Share E-Tamil News
இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். மந்திரிகளாக நியமிக்கப்பட்ட ஜி.எல் பெரிஸ், தினேஷ் குணவர்த்தனே, பிரசன்ன ரணதுங்கே, காஞ்சனா விஜசேகர ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் துறை விவரம்....
தினேஷ் குணவர்தனெ- பொது நிர்வாகம்
ஜி.எல் பெரிஸ்- வெளியுறவுத்துறை
பிரசன்னா ரணதுங்கா- நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி
காஞ்சனா விஜேசேகர- மின்சாரம் மற்றும் எரிசக்தி