25ம் தேதி போராட்டம்...... தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு...

By செந்தில்வேல் – May 14, 2022

534

Share E-Tamil Newsதஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில உயர் நிலைக்  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாநிலத் தலைவர் சண்முகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது.... அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்று மாறு கேட்டுக் கொண்டார். அப்போது முதலமைச்சர்  படிப்படியாக  அனைத்து கோரிக்கைகளை  நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார். ஆனால் கடந்த 7ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என பேசினார். அவரது பேச்சு அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது பேச்சை கண்டிக்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி மாவட்ட அளவில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற உள்ளது. தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.