ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிப்பு....

By செந்தில்வேல் – May 14, 2022

534

Share E-Tamil Newsஐக்கிய அரபு அமீரகத்தின் 2வது அதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே அலுவல் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அதிபர் ஷேக் கலீபா நேற்று மதியம் அபுதாபி அதிபர் அரண்மனையில் காலமானார். அவருக்கு வயது 73. இவரது மறைவை அடுத்து ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  கலீஜ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. 61-வயதான  ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராகவுள்ளார்.