லிப்ட் அறுந்து விழுந்து மாணவன் உயிரிழந்த விவகாரம்.... 3 பேர் கைது....

By செந்தில்வேல் – May 14, 2022

534

Share E-Tamil Newsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியின் போது கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் கீழ் தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு வந்தனர். அப்போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் லிஃப்டுக்குள் இருந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 இளைஞர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.