அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்....

By செந்தில்வேல் – May 14, 2022

536

Share E-Tamil News



இன்று அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசு பஸ் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பஸ்சில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் கண்டக்டர் தி.பெருமாள் பிள்ளை, டிக்கெட் எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக, கண்டக்டருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று  முதல்வர் ஸ்டாலின் மிகவும் வேதனையடைந்தார். உயிரிழந்த அரசுப் பஸ்  கண்டக்டர் தி.பெருமாள் பிள்ளை குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், உயிரிழந்த அரசுப் பஸ் கண்டக்டரின் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.