By செந்தில்வேல் – May 14, 2022
Share E-Tamil News
கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டு என முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர். இந்த நிகழ்வானது, பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.