போராட்டத்தின் போது போட்டோ எடுத்த 2 பேர் மீது கார் மோதி படுகாயம்....

By செந்தில்வேல் – May 14, 2022

534

Share E-Tamil News



கேரள மாநிலம் மலப்புறத்தில் காவல் நிலையம் முன்பு நேற்றைய தினம் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டத்தில்  ஈடுபட்ட 2 பேர்  போட்டோ எடுப்பதற்காக சாலையின் நடுவே  நின்று கொண்டு  போராட்டம் செய்யும் போட்டோ எடுத்துள்ளனர். இவர்கள் போட்டோ எடுக்கும் அதேவேளையில் டிரைவரின் கவனக்குறைவால் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே நின்ற 2 பேரின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும்  சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மலப்புறம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.