By செந்தில்வேல் – May 13, 2022
Share E-Tamil News
நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 61வது படம் என்பதால், இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வலிமை படத்திற்கு அப்டேட் விடாமல் இருந்தது போல, இந்த படத்திற்கும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
அவ்வப்போது, படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் தான் பரவி வருகிறது. இதனால், அதற்கான அறிவிப்புகள் கூட வரவில்லையே என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே , இந்த படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொக்கன்,வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதில், சமுத்திரக்கனி தான் AK 61-படத்தில் நடிப்பது உறுதி செய்துவிட்டார்.
இது குறித்து பேசிய சமுத்திரக்கனி ” தம்பி எச்.வினோத் இயக்கத்தில் அஜித் சார் கூட படம் பண்றேன். அது ஒரு அற்புதமான கதைக்களம். அதில் ஒரு நல்ல கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது. அதில் ஒரு 100% உண்மையா உழைத்து ஒரு நல்ல படைப்பா கொடுக்கணும்.படத்தில் இருப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.