டிவிட்டரை வாங்கும் முடிவு நிறுத்தி வைப்பு...

By செந்தில்வேல் – May 13, 2022

538

Share E-Tamil Newsபிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்க எலன் மஸ்க் தயக்கம் காட்டுவதாக தகவல் கூறப்படுகிறது.

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்,  தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று ட்வீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதன்படி, ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.