விண்வெளியில் இருந்து விழுந்த உலோக பந்துகள்...

By செந்தில்வேல் – May 13, 2022

536

Share E-Tamil Newsகுஜராத்தில் மாநிலத்தில் வாதோராவில் ஆனந்த், பலேஜ், கம்போலாஜ் ஆகிய பகுதிகளில் விண்வெளியில் இருந்து உலோக பந்துகள் விழுந்துள்ளது. கம்போலாஜில் விழுந்த உலக பந்து ஒரு வீட்டின் கூரையின் மீது விழுந்து சேதப்படுத்தியது.

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் 3 பகுதிகளிலும் உள்ள காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ஆனந்த் போலீஸ் சூப்பிரண்டு அஜித் ராஜ்ஜியன் கூறுகையில், கம்போலாஜில் விழுந்த உலக பந்த தவிர, மற்ற பந்துகள் பண்ணை மற்றும் திறந்த வெளிகளில் விழுந்தது. இந்த பந்துகள் ராக்கெட்டின் பாகங்கள் என நம்பப்படுகிறது. இருப்பினும் இந்த பந்துகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக  என கூறியுள்ளார்.