பிரஸ்க்கு ஓப்பனா500 ரூபாய் கவர்... பாரதியார் பல்கலைகழகத்தில் கூத்து..

By செந்தில்வேல் – May 13, 2022

538

Share E-Tamil Newsகோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா இன்று  நடந்தது.  தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். இப்பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., பட்டம், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கங்களையும் கவர்னர் ரவி வழங்கினார். இந்த நிகழ்சசியில் அமைசசர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க வசதியாக கோவை பத்திரிக்கையாளர்களுக்கு நேற்றைய தினம் அழைப்பிதழ் மற்றும் செய்தி குறிப்பு உள்ளிட்டவை  பல்கலைகழகம் சார்பில் வழங்கப்பட்டது. சுமார் 80க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட  பைல்களில் ஒரு கவரில் 500 ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்த விவகாரம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. பிரஸ்க்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என கோவை பாரதியார் பல்கலைகழகம் தெரிவி்ததுள்ளது.