இந்த தகவலை கேட்க நீங்கள் யார்....? தாஜ்மகால் அறைகளை திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி.....

By senthilvel – May 12, 2022

540

Share E-Tamil Newsதாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பாஜக இளைஞர் அணி ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு இன்று லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "  இந்த தகவலை கேட்க நீங்கள் யார்...? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது...? பாதுகாப்பு காரணங்கள் என்று சொல்வது உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில், போய் வரலாற்றை படியுங்கள். ஆராய்ச்சி செய்யுங்கள். நாளைக்கு எங்கள் அறைகளை கூட பார்க்க வேண்டும் என்று கூறுவீர்கள் போல. பொதுநல வழக்கை அவமானப்படுத்தாதீர்கள். உண்மை, எதுவாக இருந்தாலும் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டும். இதனை பல்வேறு வழிமுறைகளின் கீழ் மேற்கொள்ள வேண்டும். மேலும் இதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணி" என நீதிமன்றம் தொிவித்து,  இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.