திருச்சி மாநகராட்சி முன்பு தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் போராட்டம்......

By senthilvel – May 12, 2022

542

Share E-Tamil News



திருச்சி தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் சங்கம்  மற்றும் சிஐடியூசி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்...... 20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்த கூடாது. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி போடப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது.பல ஆண்டு காலமாக தரைக் கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும்.  மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் கணேசன், சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  போராட்டம் முடிவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.