By செந்தில்வேல் – May 10, 2022
Share E-Tamil News
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. எனவே கோதுமையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் தடுக்கபடுகிறது.
கோதுமையை பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள், பொரித்த உணவுகள், கேக்குகள், பிஸ்கெட்டுகள் என்று ஏராளமானவை செய்யப்படுகிறது.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு புண், மேல் தோல் உரிந்த இடம் ஆகியவற்றில் வெண்ணெய் கலந்து பூசினால் எரிச்சல் தணியும். கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளின் மேல் வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.