டில்லிக்கு எதிராக சென்னை அணி அபார வெற்றி....

By செந்தில் வேல் – May 9, 2022

536

Share E-Tamil News15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டெவன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தி இருந்த கான்வே இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 28 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அவர் அரைசதம் கடந்தார். இதனால் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்து அசத்தியது. சிறப்பாக விளையாடிவந்த கெய்க்வாட் 41 ரன்களில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து துபே களமிறங்கினார். 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவன் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு, மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் தோனி சிக்சர் அடித்த அவர் 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இமாலய இலக்கு என்பதால் தொடக்கம் முதலே அதிரடி காட்ட வேண்டிய சூழ்நிலையில் இறங்கிய டெல்லி அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர், தொடக்கவீரர்கள் வார்னர் (19)ரன்களிலும் , பரத்(8) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மிச்சேல் மார்ஷ் 25 ரன்களில் மொயீன் அலி சுழலில் சிக்கினார். கேப்டன் ரிஷப் பண்ட் 21 ரன்களில் மொயீன் அலி பந்தில் போல்டாகி வெளியேற அடுத்து வந்த வீரக்கள் ஒற்றை இழக்க ரன்களில் வேகமாக பெவிலியன் திரும்பினர். இறுதியில் டெல்லி அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. இதன் மூலம் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெரும் 4-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது