கேழ்வரகினால் உண்டாகும் நன்மைகள்....

By செந்தில்வேல் – May 6, 2022

536

Share E-Tamil Newsகேழ்வரகு  மிகவும் சத்தான தானியமாகும்,கேழ்வரகில் அரிசி, மக்காச்சோளம் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் இல்லாத மெத்தியோனைன் என்ற அமிலத்தைக் கொண்டள்ளது, மருத்துவ குணங்கள் நிறைந்தது.
 
சிலர் கேழ்வரகை  ஊறவைத்து முளைகட்டிய பிறகு சாப்பிடுவார்கள் குறைந்த ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது பயனளிக்கும்.
 

கேழ்வரகில் நார்ச்சத்து  புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு, அத்துடன் பல முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கேழ்வரகின் பயன்கள் காரணமாக இது மிகவும் சத்தான தானியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 

கேழ்வரகில் கால்சியம் அதிகமாக உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு கனிமமாகும். இதில் உள்ள இரும்புச்சத்து  உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
 

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு கால்சியம் தேவைப்படுகிறது,ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் முக்கியமானது. கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட தோசை இட்லி கஞ்சியை  வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
 

உடல் எடையைக் குறைக்க  கேழ்வரகு சிறந்தது. கோதுமை ரொட்டி மற்றும் அரிசிக்கு பதிலாக கேழ்வரகை பயன்படுத்தலாம், இதில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது பசியைக் குறைக்கிறது. கேழ்வரகு சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேழ்வரகை பயன்படுத்தி சர்க்கரையில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைக்கலாம். இதில் அரிசி, கோதுமையை விட அதிக அளவு பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.