உள்ளாட்சித் தேர்தல்... இந்த தேதியில் அறிவிக்கப்படுகிறது..

By செந்தில்வேல் – January 9, 2022

1866

Share E-Tamil Newsநகர்ப்புற உள்ளாட்சி தேர்தmfல தேதியை ஜனவரி 31-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையம் இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச்சாவடி மையங்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்ள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிக்கும் பணி,  எந்தெந்த வார்டு ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு என்று பிரித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொங்கல் முடிந்து  நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் தேதி வரும் 17-ந்தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies