ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை அணி...

By செந்தில் வேல் – May 2, 2022

536

Share E-Tamil News



15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற    46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின..போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் ,களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். .ருதுராஜ் கெய்க்வாட்  அரைசதம் அடித்தார்.தொடர்ந்து கான்வே 39 பந்துகளில் அரைசதம் அடித்தார் . அரைசதம் கடந்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் . மார்கோ  ஜான்சென்  வீசிய ஒரு ஓவரில் 2 சிக்ஸர் .1 பவுண்டரி பறக்கவிட்டார் கான்வே .மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில்  99 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து  வெளியேறினார் . அதன்பின்னர் வந்த கேப்டன் டோனி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கான்வே அதிரடி காட்ட  இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.டேவான் கான்வே 85 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்  .இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி 203 ரன்கள் இலக்குடன் விளையாடியது .தொடக்க வீரர்களாக சிறப்பாக ஆடி தொடக்க விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர் . அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலே விக்கெட்டை இழந்தார் .அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார் .விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார் .அவர் 47 ரன்களில் ஆட்டமிழந்தார் .நிக்கோலஸ் பூரன் கடைசி வரை போராடினார் .64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .இருந்தாலும் ஹைதராபாத் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை . இறுதியில் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்  இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது :