3 ராஜ்யசபா சீட்டு திமுகவில் யார் யாருக்கு...?

By செந்தில் வேல் – May 1, 2022

542

Share E-Tamil Newsதமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு மே மாதம் இறுதிக்குள் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்ந்தெடுக்க 36 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இந்த முறை காலியாக உள்ள 6  எம்.பி. பதவிகளில் தி.மு.க.வுக்கு 3 கிடைக்கும். கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்தால் தி.மு.க.வுக்கு 4வது எம்.பி.யும் கிடைக்க வாய்ப்புள்ளது. தங்களுககு இந்த முறை ஒரு ராஜ்யசபா சீட்டு வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கேட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டிருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே திமுக உதவியுடன் சிதம்பரம் எம்பி ஆவாரா? அல்லது வேறு யாருக்காவது சீட்டா எனபது தெரியவில்லை.   தி.மு.க.வில் டில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருக்கும் ஏ.கே.விஜயனுக்கு கண்டிப்பாக சீட்டு உண்டு என்கின்றார்கள். அவரது பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது.அதேபோல் தேனி மாவட்ட செயலாளர்களில் ஒருவரான. தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ராஜ்யசபா சீட் உறுதி என் பேசப்படுகிறது. 3வது சீட்டு பேராசிரியர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு என கூறப்படுகிறது.