ஜடேஜா விலகல் ... சிஎஸ்கே அணிக்கு டோனி மீண்டும் கேப்டன்...

By செந்தில்வேல் – April 30, 2022

536

Share E-Tamil News15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  கடந்த  சீசன் வரை சென்னை அணியின் கேப்டன் ஆக இருந்த டோனி இந்த சீசனில்  பதவியை விட்டு விலகினார் ,இதனால் ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . இந்த தொடரில் ஜடேஜா தலைமையில் சென்னை அணி விளையாடியுள்ள 8  போட்டிகளில் 2 ல் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது . இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு ஜடேஜா விலகியுள்ளார் ,கேப்டன் பதவியை மீண்டும் டோனியிடம் ஒப்படைத்துள்ளார்