ஸ்ரீரங்கம் தைத்தேர்.. இன்று கொடியேற்றம்..

By செந்தில்வேல் – January 9, 2022

118

Share E-Tamil News



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 19-ந் தேதி  வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று (9-ந்தேதி) அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர்லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
அங்கிருந்து இரவு 8.45க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் நாளை 10-ந்தேதி) அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.
திருவிழாவின் 3ம் நாளான 11-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 12-ந்; தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 13-ந் தேதி காலை சே~ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 14-ந் தேதி  காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளிகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 17-ந் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்;  தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்திலேயே எழுந்தருளுவார். மேலும் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies