தமிழக உளவுத்துறைக்கு முதல் பெண் ஐஜி..

By செந்தில் வேல் – January 9, 2022

950

Share E-Tamil Newsதமிழக உளவுத்துறையில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் இருந்து வருகிறார். அடுத்தகட்டமாக டிஐஜியாக ஆசியம்மாளும், எஸ்எஸ்பி என்று அழைக்கப்படும் எஸ்பி அந்தஸ்தில் சரணவனும் இருந்து வந்தனர். ஐஜி பதவி காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று உளவுத்துறை டிஐஜி ஆசியம்மாளுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசியம்மாள் தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies