மணப்பாறையில் ஆட்டம் காட்டும் சுயேட்சைகள்... இன்று ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு தாவல்...

By செந்தில் வேல் – April 29, 2022

536

Share E-Tamil Newsதிருச்சியில் உள்ள மணப்பாறை நகராட்சியில் கவுன்சிலர்களில், உள்ள 27 இடங்களில் 11இடங்களில் திமுகவும், 11 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதனால் மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.  இதனால் மணப்பாறையையும் திமுக கைப்பற்றும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 15 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றது. திமுகவிற்கு 12 ஓட்டுக்களே கிடைத்தது.இதனால் மணப்பாறை நகராட்சித் தலைவராக அதிமுகவின் சுதா பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் திடீரென அமைச்சர்கள் நேரு, மகேஷ் ஆகியோரை சந்திதது திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மணப்பாறை நகராட்சியில் திமுகவின் பலம் 14 ஆக உயர்ந்தது. அதிமுகவின் பலம் 13 ஆக குறைந்தது.. இதனால் நகராட்சி பதவியை அதிமுக இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில் மணப்பாறை நகராட்சி வார்டு 1 எண் சுயேட்சை கவுன்சிலர் செல்லம்மாள்  இன்று திடீரென திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமாரை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக மணப்பாறை நகராட்சியில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை திமுக 14 அதிமுக 14 என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.