செரிமான சக்தியை தூண்டும் கிரீன் டீ......

By senthil – January 8, 2022

68

Share E-Tamil Newsகிரீன் டீ செரிமான சக்தியை தூண்டி செரிமான உறுப்புகளுக்கு, நன்மை செய்யும். ஆகவே சாப்பாடு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் பிறகு க்ரீன் டீ குடிப்பது நல்லது.

உடல் எடையை குறைப்பதற்கு கிரீன் டீ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கிரீன் டீ குடித்தால் உடம்பில் உள்ள கலோரிகள் அனைத்தும் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.

சர்க்கரை நோயாளிக்கு, இந்த க்ரீன் டீயானது மிகவும் நல்லது. இந்த க்ரீன் டீ ரத்தக் குழாய்களில் சேருகின்ற கொலஸ்டரோலின் அளவினைக் குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் , உடலில் தேவையற்ற கட்டிகளின் வளர விடாது. பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் இவை அனைத்தும் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.

மனஅழுத்தம் இருக்கும் சமயங்களில் கிரீன் டீ குடித்து வந்தால் மனஅழுத்தம் மற்றும் மன சோர்வினை போக்கி விடும். கிரீன் டீயின் இலைகளை அதிக நேரம் அடுப்பில் கொதிக்க விடக்கூடாது. அவ்வாறு கொதித்தால் அது கசப்புத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.

கிரீன் டீயை அதிக சூடாகவும் குடிக்கக்கூடாது. ரொம்ப நேரம் கழித்து குளித்தால் அல்லது ஆறிய பின்னர் குடிக்க கூடாது. மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

கிரீன் டீ செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ இலைகளை போட்டு இரண்டு நிமிடம் வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடத்திற்கு பிறகு கிரீன் டீ சாறு வெந்நீரில் இறங்கி இருக்கும். அதை வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies