சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன? ..

By செந்தில்வேல் – April 22, 2022

534

Share E-Tamil News



கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம்  நேற்று இன்றும்  தனிப்படை போலீஸ் ஐஜி சுதாகர், நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் என்னென்ன கேள்விகள் எழுபப்பட்டன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்?

எஸ்டேட்டின் சிசிடிவி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்னர் உங்களிடமோ, உங்களது உறவினரிடமோ பேசினாரா?

 சிசிடிவி காட்சிகளை எத்தனை நாட்களாக தினேஷ்குமார் ஆய்வு செய்து வந்தார்?

கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே தெரியுமா? 

கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் தெரிவத்தார்?

 எப்போதும் மின்தடை ஏற்படாத பகுதியான கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து யாரிடமாவது கேட்டீர்களா? என்பன குறித்த கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..