கரூரில் இன்று 6 டூ 6... அமைச்சர் செந்தில்பாலாஜியின் சத்தமில்லாத சாதனை..

By செந்தில்வேல் – January 8, 2022

572

Share E-Tamil Newsகரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டு பகுதிகளில் 115 இடங்களில் புதிய தார்சாலை அமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட38 கோடி மதிப்பிலான பணிகளை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அதிகாலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை  தொடர்ந்து துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோவன், சிவகாமசுந்தரி, கலெக்டர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது... பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 115 இடங்களில் 29 கிலோ மீட்டருக்கு, 18 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைத்தல் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள், 32 கிலோமீட்டருக்கு 17 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 211 திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை 38 கோடி மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்ட இந்த பணிகள் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies