செங்கல்பட்டு இரட்டைக்கொலை.. தப்பிய குற்றவாளிகள் 2 பேர் வெள்ளத்துரை டீம்மால் என்கவுண்டர்..

By செந்தில்வேல் – January 7, 2022

1316

Share E-Tamil Newsசெங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பி வந்துள்ளார்.  அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை நாட்டு வெடிகுண்டு  வீசியுள்ளனர்.இதில் நிலைதடுமாறிய கார்த்திக்கை சரமாரியாக வெட்டி தலையை உரு தெரியாமல் சிதைத்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் தப்பியோடிய மர்ம கும்பல் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ்( 22) என்பவர் டிவி பார்த்து கொண்டிருந்த போது அதே கும்பல் மகேஷை வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோட்டடிவிட்டது. இந்த சம்பவம் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இக்கொலையில் தொடர்புடைய செங்கப்பட்டு அருகே மொய்தீன், தினேஷ் ஆகியோரை கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்டை போலீசார் பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டில் அவர்கள் இருவரும் இறந்தனர்.. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies